“நாம் செய்யும் நல்ல காரியம் தர்மம் நாம் செய்யும் உயர்ந்த காரியம் அன்னதானம்”

தொண்டர்களுக்கு அன்னதானம் :

ஆன்மிகம் வளர்ந்து வருகின்ற இடங்களில் எல்லாம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நமது இயக்கத்தில் 3௦௦ முழுநேர இறைத் தொண்டர்களும், சுமார் 5௦௦ இறை அன்பர்களும் வீடுவீடாக சென்று எல்லோருக்கும் மந்திரம் கூறி மானசீக பூஜை செய்யும் முறையை போதித்து வருகின்றனர்.

அத்துடன் இறை வாசகங்கள் அடங்கிய POSTER, NOTICE, புத்தகங்கள், தெய்வீக தென்றல் CD கொடுத்து வருகின்றனர். இது மட்டுமல்லாது கோயில்களில் இறைவாசகம் அடங்கிய BOARD வைத்தல் மற்றும் DIGITAL BANNER BOARD வைத்தல் போன்ற தொண்டு செய்பவருக்கும் அன்னதானம் அன்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, நமது தொண்டர்கள் எல்லோரும் படித்த, பட்டதாரி இளைஞர்களே! எல்லோரும் இறைநினைப்போடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தே தனது சுயவருமானத்தை பொருட்படுத்தாது இறைத் தொண்டு செய்ய வருகிறார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட இறைத் தொண்டர்களுக்கு அன்றாடம் அன்னதானம் ஆங்காங்கே வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட இறைத் தொண்டர்களின் அன்னதானத்திற்க்கு உதவ முன்வாருங்கள்.


“நாம் செய்யும் நல்ல காரியம் தர்மம் “ இறைத் தொண்டு செய்யும் ஒருவருக்கு அன்னதானம் செய்வதால் கோடிப் புண்ணியம் சேரும் “


ஞாயிறு தோறும் அன்னதானம் :

ஞாயிறு தோறும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா, நத்தாநெல்லூரில் அமைந்திருக்கும் தியான சபையில் இலவசமாக தியான வகுப்புகள், யோகா,ஆன்மிக சொற்பொழிவு, மந்திரப் பயிற்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் பயிற்சியில் கலந்து கொண்ட மக்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பலர் கலந்துக்கொண்டு பயன் பெற்றுவருகின்றனர். இந்த அன்னதான நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்த ஆன்மிகம் ஆர்வம் கொண்ட பக்தர்கள் SPONSOR செய்து வருகின்றனர். விருப்பம் இருந்தால் நீங்களும் SPONSOR செய்து அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

அமைப்பாளர் பயிற்சி முகாமும் அன்னதானமும்


நமது இனிய இந்து மதம் கூறும் மகத்தான வழிபாட்டுக் கருத்துக்களை ஆங்காங்கே மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பவர்கள் தான் அமைப்பாளர்கள். இந்த அமைப்பாளர்களுக்கு பழனி To திண்டுக்கல் மெயின் ரோட்டில் கணக்கன்பட்டியில் அமைந்திருக்கும் தியான சபையில் மாதம் இருமுறை பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


பயிற்சியின் நோக்கம்:

 • தியானத்தை கற்றுக் கொடுத்தல
 • மந்திரப் பயிற்சி அளித்தல்
 • மானசீக வழிபாட்டு முறையை போதி த்தல்.
 • பிரார்த்தனை செய்யும் முறையை கற்றுக் கொடுத்தல்./li>
 • மக்களிடம் நடந்து கொள்ளும் முறையை போதித்தல்
 • பக்தி பேச்சை கதை கருத்தோடு பேச கற்றுக்கொடு த்தல்.
 • யோகாசனங்களை கற்றுக் கொடுத்தல்.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் இந்து இளைஞருக்கு கட்டணம் கிடையாது. தங்குவதற்கு இடவசதியும், மூன்று வேளை அன்னதானமும் அளிக்கப்படும். இந்த அன்னதானத்தில் விருப்பமிருந்தால் நீங்கள் பங்கு பெறலாம்.

திருவண்ணாமலையில் நமது இயக்கத்தின் அன்னதானம் :


பஞ்சபூத கோயில்களில் அக்கினியாகிய ஜோதிக்கு உள்ள கோயில் திருவண்ணாமலையாகும். திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி வருவதால் பக்தியில் முன்னேற்றமும் தியானம் கைக்கூடுதலும் முக்திக்கான வழியும் கண்டிப்பாக கிடைக்கும். அதோடு மட்டுமல்லாது “ஓம் நமசிவாய” மந்திரம் கூறி கிரிவலம் வரும் அன்பர்களுக்கு பிரச்சனைகள் நீங்கும். மனதில் தெளிவும் அமைதியும் கிடைக்கும். முக்திக்கான ஸ்தலமாகிய திருவண்ணாமலையில் நமது இயக்கம் ஆங்காங்கே மினரல் வாட்டர், ரஸ்னா , கங்கா ஜல், புளியோதரை, சாம்பார் சாதம் போன்றவைகள் வழங்கி வருகிறது. அதோடு, ஆன்மிக அறிவை நமது இனிய இந்து மக்கள் விருத்தி செய்து கொள்வதற்க்காக.

 • இந்து மதம் ஓர் இனிய மதம் இதுவே நமது வெற்றியின் திறவுகோல்.
 • இனிய இந்து மதம் கூறும் வழிபாடும் வெற்றி வழிமுறைகளும்.
 • ஆன்மிகம், ஆரோக்கியம், பொருளாதாரம் மேம்பட இனிய இந்து மதம் கூறும் வழிமுறைகள்.
 • ஆறுகால பூஜை அட்டவணை.

இவை அனைத்தும் இலவசமாக கொடுத்து வருகிறோம். அடுத்து,

 • இளைஞர்கள் உயர்வு பெற இனிய இந்து மதம் கூறும் வழிமுறைகள் புத்தகம்.
 • இனிய இந்து மதம் வழங்கும் வெற்றி தரும் இறை வழிபாடுகள் புத்தகம்.
 • தெய்வீக தென்றல் CD

இவை அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். இதில் வரும் பணத்தை பாதி அன்னதானத்திற்க்கும், மீதியை புத்தகம் Re-Print செய்ய கொடுத்து வருகிறோம்.

தாங்கள் இதில் கலந்து கொள்ள விரும்பினால் அன்னதான நன்கொடை வழங்கலாம் அல்லது அரிசி, பருப்பு வாங்கிக் கொடுக்கலாம்.

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சி :

பக்தியோடு பழனிக்கு மந்திரம் கூறிக்கொண்டே மானசீக பூஜை செய்து கொண்டு வருபவர்களுக்கு எல்லாம் கைக்கூடும். நமது தியான சபை பழனி to திண்டுக்கல் ரோடு கணக்கன்பட்டியில் அமைந்திருப்பதால் பாதயாத்திரை செல்பவருக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கி வருகிறோம். இதில் பல நல்ல உள்ளங்கள் எங்களுடன் பங்கேற்கின்றனர். இந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு செய்யப்படும் அன்னதானத்தில் நீங்கள் விரும்பினால் பருப்பு, அரிசி, நன்கொடை ஏதாவது ஒன்றை வழங்கலாம்.

ஐயப்ப பக்தர்களுக்கான அன்னதானம் :

பொதுவாக, ஐயப்பன் கோயிலுக்கு வாகனத்தில் செல்லும் பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பும் போது பழனியை தரிசனம் செய்து செல்வது பழக்கமாக வைதிருக்கிறார்கள். சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் நமது தியான சபையில் தங்கி அன்னதானம் சாப்பிட்ட பின் செல்கிறார்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வாங்கிக் கொடுத்து புண்ணியம் சேர்க்கலாம்.


" இறைவன் யாருக்கு நலம் புரிய நாடுகின்றாரோ அவருக்கே அதிக துன்பங்களை தருகின்றார் "


என்ற பொன்மொழிக்கிணங்க பகவான் தனது பக்தர்களுக்கு சோதனைகளை தந்து அவர்களது மனதை பக்குவப்படுத்தி மென்மேலும் உயர்த்துகின்றார்.

சோதனை கால கட்டங்களில் இருக்கும் நோயாளிகளை ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் நமது இயக்க திருத்தொண்டர்கள் சந்தித்து அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் இருக்க தொடர்ந்த இறை நினைப்பு மற்றும் மந்திரம் உச்சரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறோம். மேலும் அவர்கள் வெற்றி அடைய செய்யும் பொருட்டு "ஆன்மிகம் , ஆரோக்கியம் பொருளாதாரம் மேம்பட இனிய இந்து மதம் கூறும் வழிமுறைகள்" அடங்கிய பிரசுரங்கள் மற்றும் ஆறுகால மானசீக பூஜை அட்டவணை கொண்ட கார்டுகள் கொடுத்து அவர்களது ஓய்வு நேரத்தை பகவானை நினைக்கும் பயனுள்ள நேரமாக மாற்ற உதவி செய்கின்றோம்.


“எதை இழந்தாலும் யார் ஒருவர் இறை நினைப்பை இழக்கவில்லையோ அவர் மீண்டும் எதிலும் வெற்றி பெறுவார்.”

- சுவாமி விவேகானந்தர்

மனதிற்குள் கோயிலை கொண்டு வந்து வழிபட்டால் மகத்தான வெற்றி பெறுவீர்கள்”

மந்திரம் கூறிக்கொண்டே இறைநினைப்போடு செய்யும் மானசீக பூஜை, வழிபாடு, பஜனை, கிரிவலம், பாதயாத்திரை யாவும் உங்களை பல வழிகளில் உயர்வடையச் செய்யும். “பயம், சந்தேகம், சோம்பல் ஆகிய மூன்று குணங்களும் வெற்றியை நெருங்க விடாது தடுக்கும்” என்று பாரதியார் கூறுகிறார். இம்மூன்றும் நம்மை விட்டு போக, அத்துடன் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முறையாக இறைவழிபாட்டை கற்றுக் கொள்ள வேண்டும். எதை செய்தாலும் அதற்கு ஒரு சூத்திரம், அதாவது வழிமுறைகள் இருக்கும் அல்லவா! அது போலத்தான் நமது இனிய இந்து மதம் நாம் எப்படி பகவானை வழிபட்டு வாழ்க்கையில் உயர்வடைவது என்று கூறுவதை சுருக்கமாக பிரிண்ட் செய்து வீடுகள் தோறும் கொடுத்தும், கதவு மற்றும் சுவரில் அவர்கள் அனுமதியோடு ஒட்டியும் போதனை செய்து வருகிறோம்.

ஒவ்வொருவரையும் சந்திக்கும் பொழுது “ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!” என்று மந்திரம் கூற அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் மானசீக இறைவழிபாட்டையும் மற்றும் ஆறுகால பூஜை முறையும் சொல்லிக் கொடுக்கிறோம். பகவானை எப்படி முறையாக வழிபடுவது என்று தெரியாது இருக்கும் எத்தனையோ இந்து மக்கள், நமது இயக்கம் வீடுகள் தோறும் செல்லும் இந்த முயற்சியினால் வழிபாட்டுத் துறையில் உறுதியாக வெற்றி பெறுவர், வாழ்கையில் கட்டாயம் உயர்வு பெறுவர்.

“ தொண்டு செய்வதில் ஈடுபாடு கொள் – கடவுளுக்கு இதைவிட சிறந்த வழிபாடு வேறில்லை”

-ஸ்ரீ அன்னை


குறிப்பு: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகள் தோறும் இறை வாசகம் ஓட்டும் பணி 9௦% நிறைவேறியுள்ளது.

நமது இயக்கத்தின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களில் 10X20 அடி உயரத்தில் இனிய இந்து மதம் கூறும் வழிபாட்டு முறைகள் அடங்கிய BANNERகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் (ECR raod) சென்னை to கன்னியாகுமாரி வரை ஒவ்வொரு 20 கி.மீ க்கும் 9X15 அடி உயரத்தில் இறைவாசகங்கள் அடங்கிய BANNER கள் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கிராமங்கள் தோறும் நமது இயக்க தொண்டர்கள் சென்று அங்குள்ள சிறிய சிறிய கோயில்களிலும் 2X4 அடி உயரத்தில் இறைவழிபாட்டு முறைகள் அடங்கிய FOAM BOARD வைத்திருக்கிறார்கள். இதுவரை ஏறத்தாழ 7000 கிராமங்களில் 10000 board கள் தமிழ்நாடு முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இறை செய்தியுள்ள board-ஐ படித்த பின் பல இந்து மக்கள் மந்திரம் கூறி மானசீகமாக கோயிலை உள்ளத்தில் வைத்து ஆறுகால பூஜை செய்து வருகிறார்கள் என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.


“பொறுப்புணர்சியுடன் செயல்டுபவர் எதையும் சாதிக்க திறன் கொண்டவர்”

- சுவாமி விவேகானந்தர்

நமது முக்கியமான உறுப்புகளில்,

 • இதயம்
 • நுரையிரல்
 • கல்லீரல்
 • மண்ணீரல்
 • சிறுநீரகம்(கிட்னி )

பொதுவாக, கோப உணர்ச்சி கல்லீரலை பாதிக்கிறது. அதிகப்படியான கவலை நுரையீரலை பாதிக்கிறது. அதிகமான பயஉணர்ச்சி சிறுநீரகத்தை பாதிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மனம் இறைவனை நம்பி நினைக்காதிருப்பதே. மனம் தெளிவடைவதற்கு கண்டிப்பாக தியானம் அவசியம். உடல் உள் உறுப்புக்களை சரியாக வைத்துக் கொள்ள யோகாசனம் தேவை. இதை நமது சித்தர்கள் முனிவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

யோகாசனமும், தியானமும் ஆரோக்கிய கவசங்கள் என்று தான் கூறவேண்டும். 80% வியாதிகளை யோகாசனத்தாலும், தியானத்தாலும் போக்கி விடமுடியும். இது பலருடைய அனுபவத்தில் நடந்திருக்கிறது. யோகாசனங்கள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாது நோய்கள் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
தியானம் ஞாபக சக்தியையும், இறை சக்தியையும் வளர்க்கும் கலையாகும். இவை இரண்டும் நமக்கு இரண்டு கண் போன்றதாகும்.


“ உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ”

-திருமூலர்

பொதுவாக, உடம்பு அழிந்தால் உயிரும் அழியும் சிறந்த மெய்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே உடம்பை வளர்க்கும் விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். எனது உடம்பை யோகப் பயிற்சிகளால் காத்துக் கொண்டேன். இதனால் உடம்பும் வளர்ந்தது, உயிரையும் வளர்த்தேன் என்று திருமூலர் கூறியிருக்கிறார். உடல் பல நோய்களால் கஷ்டப்படுகிறது மனமோ ஆசைகளால் சிக்கித் தவிக்கிறது. யோகப் பயிற்சிகளையும் தியானப் பயிற்சிகளையும் முறையாக மேற்கொண்டு வந்தால் மன துன்பத்திலிருந்தும், உடல் துன்பதிலிருந்தும், மன சிக்கலிருந்தும் விடுபட்டு பகவானை நினைத்துக் கொண்டே ஆனந்தமாக வாழலாம்.

இப்படிப்பட்ட உயர்ந்த விஷயங்களை நமது குழந்தைச் செல்வங்களாகிய மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே நமது இயக்கத்தின் இலட்சியமாகும். இதனால், கிராமங்கள் தோறும் உள்ள பள்ளிகளில் அனுமதி வாங்கி சுமார் 5 ஆண்டுகளாக நமது இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கம் மற்றும் MODERN HEALTHY INDIAN YOGA FOUNDATION இணைந்து யோகா தியான வகுப்புகள் எடுத்து அதற்கான பாராட்டு கடிதங்களும் தலைமை ஆசிரியரிடம் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாது வீதிகள் தோறும் சென்று MEGA PHONE மூலமாக பேசி பிள்ளைகளை வரவழைத்து ஒன்று சேர்த்து யோகா தியானம் மந்திரம் பயிற்சியளித்து மாலை பொழுதை மகத்தான பொழுதாக ஆக்கியுள்ளது.

“பிறருக்கு செய்யும் பொதுநலம் மூலம், உனக்கே நன்மை செய்து கொள்கிறாய்”

-அரவிந்தர்

நல்லது செய்ய வாய்ப்புக் கொடுக்குமாறு பகவானிடம் வேண்டுபவரே மனிதரில் நல்லவர். அப்படி நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்தவுடன் அதை சிறப்பாகச் செய்ய பகவானிடம் வேண்டிக் கொண்டு விறுவிறுப்பாக செயல்படுபவர்களே மனிதர்களில் உயர்ந்தவர். எவ்வளவு எதிர்ப்பும் இடற்பாடுகளும் வந்தாலும் தான் செய்யும் சமூகச் சேவையை தளராது செய்பவரே மனிதரில் புனிதமானவர். இவரே இறைத்தொண்டர். இத்தொண்டரை நோக்கி வந்த பிரச்சனைகள் யாவும், உணர்வுப் பூர்வமாகப் பக்குவப்படுத்த வந்தவைகளே ஆகும். இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம் மற்றும் இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கத்தின் இறைத் தொண்டர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தினந்தோறும் பிரம்ம மூகூர்த்தத்தில் 260 திருத்தொண்டர்கள் கொண்ட குழு அமைத்து பல்வேறு இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறது. மேலும், இயக்கத்திற்கு பொருள் உதவி செய்தவர்கள், திருத்தொண்டர்களுக்கு அன்னதானம் செய்பவர்கள் மற்றும் இறை வாசக பிரதி அச்சடித்துக் கொடுத்தவர்களுக்காவும் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. பெயர் பதிவு செய்த மாணவ மாணவிகளுக்கு நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும், நல்லொழுக்கமும், கல்வியில் நல்ல ஆர்வமும் கொண்டு பிற்காலத்தில் நல்ல வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பிரச்சனைகள் தீர வேண்டி முன்பதிவு செய்து கொண்ட பொது மக்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் போது தனித்தனியாக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பு: ஒவ்வொரு குடும்பத்திலும் காலை அல்லது மாலையில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பதினைந்து நிமிடம் தனக்கு பிடித்த கோயிலை உள்ளத்தில் நினைத்து இறை மந்திரம் கூறி மானசீகமாக பூஜை செய்து கூட்டாக பகவானிடம் வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் பிரச்சனை தீரும், காரியம் வெற்றியாகும். மேலும் குடும்ப கூட்டுப்பிரார்த்தனை பற்றி விவரம் அறிய இந்த அருளுரையை கேட்கவும்.

 • மாணவர்கள் கல்விக்காக பிரார்த்தனை
 • திருமணம் தாமதிக்கின்ற காரணத்திற்காக பிரார்த்தனை
 • இல்வாழ்க்கை சிறக்க பிரார்த்தனை
 • குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை
 • நோய்கள் நீங்கி உடல் நலம் தேற பிரார்த்தனை
 • கடன் பிரச்சனை தீர பிரார்த்தனை
 • தொழில் துவங்க, தொழில் முன்னேற்றம் பெற பிரார்தனை
 • குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க பிரார்த்தனை
 • குழந்தைகள் நலம் பெற பிரார்த்தனை
 • மங்கள பிரார்த்தனை அதாவது இறந்தவர்கள் ஆத்மாவிற்காக பிரார்த்தனை
 • வேலை தேடுபவர்களுக்காக பிரார்த்தனை
 • மற்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரார்த்தனை செய்ய மின்னஞ்சல் (eMail) அனுப்பவும்

“மனிதர்களை நேசிப்பதோடு, அவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள்”

-அரவிந்தர்

கும்பாபிஷேகம், கோயில் திருவிழாக்களில் நமது இந்து மக்களுக்கு இயக்கத் தொண்டர்கள் வழிபாட்டு முறைகள் அடங்கிய பிரசுர நோட்டீஸ் வழங்கும் சேவையை செய்து வருகிறார்கள்.

 • இந்து மதம் ஓர் இனிய மதம் இதுவே நமது வெற்றியின் திறவுகோல்.
 • இனிய இந்து மதம் கூறும் வழிபாடும் வெற்றி வழிமுறைகளும்.
 • ஆன்மிகம், ஆரோக்கியம், பொருளாதாரம் மேம்பட இனிய இந்து மதம் கூறும் வழிமுறைகள்.
 • ஆறுகால பூஜை அட்டவணை.

இத்துடன் தாகம் தீர்ப்பதற்கு நீர் மோர், MINERAL WATER, ரஸ்னா , கங்கா ஜல், பாதாம் கீர் இதில் ஏதாவது ஒன்றை வழங்குவார்கள். ஒரு சமையல் முடிய அடுப்பை பற்ற வைக்க ஒரே ஒரு தீப்பொறி தான் தேவை. இதுபோல் நமது இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் மக்களிடம் இறை செய்திகளைக் கொடுத்து, அவர்களிடம் விளக்கமாக சொல்லி உணரவைக்கும் போது அவர்கள் ஏதாவது ஒரு கருத்தைப் பிடித்து பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கை வெற்றி பெறுவதோடு, ஆத்மாவும் வெற்றி பெறும் என்பதை நமது இயக்கம் நம்புகிறது.

“ பிறருடைய கஷ்டத்தை போக்கும் முயற்சியில் நம்மால் ஆனதை செய்வதே மனிதாபிமானம் “

- காஞ்சி பெரியவர்குறிப்பு: இந்த பணி தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகிறது.

பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளைகளை கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார்

- சுவாமி விவேகானந்தர்தங்கக் கட்டியை நாம் அணிகலனாக அணிய முடியாது. அதை அழகான நகைகளாக செய்தபின் தான் அணியமுடியும். இதைப் போன்று நமது இந்து குழந்தைகள் திறமை மிக்கவராக இருந்தாலும், அவர்களை எப்படி வழிநடத்தி உயர்ந்த காரியங்களை செய்ய வைப்பது என்பதில் நமது இயக்கம் அக்கறை கொண்டிருக்கிறது. பல மாணவர்கள் உழைக்கின்றனர், படிக்கின்றனர் பின்பு மறதியால் கஷ்டப்படுகின்றனர், சில மாணவர்கள் நன்கு படித்து பட்டம் பெற்ற பின் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகின்றனர். பெரும்பாலோர், என்ன செய்வது என்று புரியாமல் மனம் போன போக்கில் போகின்றனர். எல்லாவற்றையும் விட பெற்றோர்களை மகிழ்விக்க தவறிவிடுகின்றனர்.

இதையெல்லாம், ஆராய்ந்து உணர்ந்து தான் “ WAY TO GET SUCCESS IN STUDIES AND EXAMINATION” என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பிரசுரமாக(NOTICE) தயார் செய்து தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை படித்து உணர்ந்து மானசீக பூஜை செய்து இறைவனை வணங்கும் முறையை அறிந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் நமது இயக்கத்தை பாராட்டி நன்றி கூறியிருக்கின்றனர்.


“எத்தனை பெரிய தடைகள் குறுக்கிட்டாலும், இறை நம்பிக்கை என்னும் ஒளியை மனதிற்குள் ஏற்றிவிட்டால் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியும் ”

- பாரதியார்

நமது இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம் மற்றும் இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கத்தில் முழுநேர தொண்டர்களாகப் பணியாற்றுபவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி நமது இயக்கமே அவர்களை பாதுகாத்து வருகிறது. இந்த மாணவர்களுக்கு வித்யா கல்வியோடு, யோகப் பயிற்சியும், தியானப் பயிற்சியும் சொல்லித்தரப்படுகிறது. இவர்கள் இனிய இந்து மதம் கூறும் ஆறுகால பூஜையை அன்றாடம் மந்திரம் கூறி மானசீகமாக செய்துவருகின்றனர்.

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”
“இளமையில் கல்” – ஔவையார்

பள்ளிக்கு சென்று படிக்காமலும், மனதினில் இறை மந்திரம் ஓதாமலும் இருக்க வேண்டாம், இது இரண்டும் அவசியம். இதனால் இதை இளமையில் கற்றுக்கொள் என்று ஔவையார் சிறப்பாக கூறியிருக்கிறார். இதனால் நமது மாணவர்கள் உயர்வடைய பள்ளிப் படிப்போடு பக்திப் படிப்பையும் படிக்கவைத்து நாம் மகிழ்வடைவோம்.
குறிப்பு: இயக்கத்தில் முழுநேர தொண்டர்களாகப் பணியாற்றும் இளைஞர்களுக்கு மேற்படிப்பிற்கான அஞ்சல் வழிக் கல்வி உதவியும் இயக்கம் செய்து வருகிறது.

“ உடல் அழிந்தாலும், ஆத்மா அழிவதில்லை… ஆத்மா வெற்றி பெற அனைவரும் சேர்ந்து பாகவானிடம் வேண்டுவதே மங்கள பிரார்த்தனை…"

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்," அர்ஜுனா ! உடல் தான் அழிகிறது. மனிதன் எவ்வாறு பழைய ஆடைகளைக் களைந்து விட்டுப் புதிய ஆடைகளை உடுத்துகிறானோ, அதேபோல் இந்த 'சரீரி' எனும் ஜீவன் பழைய உடல்களை துறந்து விட்டுப் புதிய உடல்களிடம் செல்லுகிறது" என்று அறிவுறுத்துகிறார். இறந்தவர் ஆத்மா நற்கதி அடைய நாம் கட்டாயமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பொதுவாக, இறப்பு வீடு, கருமாதி, பதினாராம் நாள்,முப்பதாம் நாள், திதி என்று நாம் ஒன்று கூடுவதே இறந்தவர்களுக்காக பகவானிடம் பிரார்த்தனை செய்யத்தான். தற்பொழுது, பலர் இதை செய்வதில்லை.

இதனை கருத்தில் கொண்டு நமது இயக்கம் வீடுவீடாக சென்று மங்கள பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக் கூறி அவர்களை மந்திரம் கூற வைத்து இறந்தவர் ஆத்மா நற்கதியடைய பிரார்த்தனை செய்ய வைக்கிறது. அதுமட்டுமல்லாது, இறந்தவர் வீட்டிற்கே சென்று அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களை மந்திரம் சொல்ல வைத்து இறந்தவர் ஆத்மா நற்கதியடைய கூட்டுப் பிரார்த்தனை செய்ய வைக்கிறோம். கவனிக்க: இறை அன்பர்களே, நீங்களும் இறந்தவர்கள் ஆத்மா நற்கதியடைய மங்கள பிரார்த்தனை செய்ய தவறாதீர்கள். தனிமையில் கூட இறந்தவர்களுக்காக பகவானிடம் வேண்டலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாட்டின் எதிர்காலம் சிறக்க வேண்டுமேயானால் குழந்தைகளிடத்தே ஒழுக்கம் வளர வேண்டும். இதற்கு அடிப்படை ஆன்மிகம் தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் விஞ்ஞான வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் நமது இனிய இந்து மதம் அன்று முதல் இன்று வரை வழங்கி வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை எடுத்து கூறுவதே நமது இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம் மற்றும் இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கத்தின் முக்கிய நோக்கம். நமது சமுதாயத்தின் பெரிய அங்கம் நமது குழந்தைகள். இவர்களது எதிர்காலம் சிறக்க தேவையற்ற சிந்தனைகள் ஒழிக்க இளமையிலிருந்தே இனிய இந்து மதம் கூறும் கருத்துக்களை ஊட்டி வரவேண்டும். இந்த கருத்தை மனதில் வைத்தே மாணவர்களுக்கென்று அவர்கள் பயன்படுத்தும் நோட்புக்கில் ஓட்டுவதற்கான லேபிள்களை நமது இயக்கம் தயாரித்து மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் கொடுத்து வருகிறது.

ஒவ்வொரு லேபிளிலும் பகவானின் படமும், வழிபட்டு மனதில் உச்சரிக்க வேண்டிய மந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளின் மனதில் பசுமரத்து ஆணி போன்று நல்ல விஷயங்கள் பதிந்து விடும் அல்லவா! இந்த ஸ்கூல் லேபிளை நமது இனிய இந்து மதத்தை சார்ந்த பல நல்ல உள்ளங்கள் ஸ்பான்சர் செய்து உதவியதை நாங்கள் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். நீங்களும் இந்த புனிதமான காரியத்தை செய்ய விருப்பப்பட்டால் அச்சடித்துக் கொடுக்கலாம், மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம். மகத்தான புண்ணியத்தையும் பெறலாம்.

“தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் மனிதனுக்கு அவசியம். இவை இணைந்து செயலாற்றினால் வெற்றி உனக்கே”

- சுவாமி விவேகானந்தர்

பொதுவாக, நமது வாழ்கையில் வெற்றி பெற பல நல்ல விஷயங்களைக் கேட்டு அறிதல் வேண்டும். பலருடைய அனுபவங்களைக் கூறும் போது நாம் அதைக் கேட்டு எளிதாக வெற்றி பெறலாம். உயர்ந்த விஷயங்களை பற்றிப் பேசுவதே சற்சங்கமாகும். நமது வாழ்கையில் தெளிவு பெற, ஆனந்தமடைய ஆன்மிகக் கதைகள் கருத்துகள் எல்லோருக்கும் அவசியமாகும். இதை அடிப்படையாக கொண்டு நமது இயக்கம் வாட்ஸ் ஆப் (WhatsApp) மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு "தெய்வீக தென்றல்" என்ற தலைப்பில் தினமும் அதிகாலை 15 முதல் 20 நிமிடம் வரையிலான குருஜி அவர்களது ஆன்மிக சொற்பொழிவுகளை அனுப்புகின்றது.

இந்த தெய்வீக தென்றல் நிகழ்ச்சியில் குருஜி அவர்கள் நமது வாழ்க்கைக்கு தேவையான மன தைரியம், குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை, கோபத்தை நீக்குதல், தொழில் முன்னேற்றம் பெற மேலும் நம்மை உயர்த்திக் கொள்ள பல தலைப்புகளில் பேசியுள்ளார்கள். இந்த அருளுரைகள் கேட்பவர் மனதுக்கு தென்றலைப் போல அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். இந்த நிகழ்ச்சியில் ஞாயிறு தோறும் நமது அன்புக் குழந்தைகளின் வளர்ச்சியை முன்னிட்டு ஆன்மிக கதைகளையும் , கருத்துக்களையும் அவர்கள் மனதில் பதியும் வண்ணம் சுவையாகவும் எளிமையாகவும் நமது இயக்க ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பேசியதை அனுப்புகின்றோம்.

“இதயமாகிய புத்தகத்தைப் படித்து விட்ட ஒருவனுக்கு மற்ற புத்தகங்கள் தேவைப்படுவதில்லை”

-சுவாமி விவேகானந்தர்

“ஞாயிறு தோறும் தியான வகுப்பும் பிரார்த்தனை கூட்டமும்.

இடம்: நத்தாநெல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை.

மனித வாழ்க்கையில் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் மூன்று. அதில் 1. உடல் 2. உயிர் 3. மனம். இந்த மூன்றும் சிறப்பாக இருக்க தியானம், யோகா பயிற்சி அவசியமாகும். இந்த அடிப்படையில் வாரந்தோறும் ஆன்மிக ஆரோக்கிய வாழ்க்கைக்கு இறைவனை நினைத்து மந்திரம் கூறி தியானம் செய்யும் முறைகளையும் , யோகா பயிற்சியையும் நமது இயக்கத்தை சார்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர்கள், யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக கற்றுக் கொடுக்கின்றனர்.

ஞாயிறு தோறும் நடக்கும் இந்த இலவச பயிற்சி முகாமில் சற்சங்கம், பக்திப் பேச்சு, யோகா பயிற்சி, மந்திரப் பயிற்சி, அன்னதானம் நடந்து வருகிறது. ஞாயிறு தோறும் நடக்கும் தியானப் பயிற்சியில் பல இந்து மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று இருக்கின்றனர். தாங்களும், தங்களை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே!.

“ உடலை காப்பது யோகம் !
உள்ளத்தை காப்பது தியானம் !
மனதை காப்பது மந்திரம் !
அறிவை வளர்ப்பது சற்சங்கம் ! “

ஒவ்வொரு வருடமும் சென்னையில் ஸநாதன தர்மமாகிய இந்து மதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல்வேறு இயக்கங்களின் சங்கமமாக "இந்து ஆன்மிக சேவை கண்காட்சி" மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 7 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் நமது இயக்கம் கடந்த 5 ஆண்டுகளாக பங்கு பெற்று வருகிறது. கண்காட்சியினை காண வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு வாழ்கையில் வெற்றி பெற நமது இனிய இந்து மதம் கூறும் வழிமுறைகள் உள்ள "Way To Successful Prayer" மற்றும் "இந்து மதம் ஓர் இனிய மதம்" பிரசுரங்களை நமது இயக்கம் வழங்கி வருகிறது. மேலும் மந்திரம் கூறுவதன் முக்கியத்துவத்தையும், மானசீக பூஜை பற்றியும் எடுத்துரைத்து "இறை மந்திரமும் ஆறு கால பூஜை அட்டவணை" உள்ள Pocket Cards அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளும் வகையில் அழகான முறையில் பிரிண்ட் செய்து வழங்கி வருகிறது.

மேலும் கண்காட்சியை காண வரும் பள்ளி மாணவர்களுக்கு இனிய இந்து மதம் கூறும் கருத்துக்களை தொகுத்து "Way to get Success in Studies and Examinations" பிரசுரங்கள் மற்றும் இறை மந்திரம் கொண்ட புத்தக லேபில்கள் இலவசமாக வழங்கி வருகிறது. கண்காட்சியை காண வரும் எல்லா தரப்பு மக்களும் பலன் பெறும்படி செய்யும் இந்த சேவைக்கு உண்மையான வாழ்த்துக்கள் கிடைத்துள்ளது.

"பிறர் உயர்வுக்கு இறை நினைப்போடு பாடுபடுங்கள் !
உங்கள் உயர்வுக்கு பகவான் கைக்கொடுப்பார் !!"